August 14 2018 0Comment

ஆடிப்பூரம்

                    ஆடிப்பூரம்:

 

ஆடிப் பூர தினத்தில் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகிய தமிழை ஆண்ட கோதை ஆண்டாள் இந்த ஜகத்தில் துளசிச் செடியின் கீழ் ஒளி வீசும் முகத்துடன், அழகே உருவாக, திருத்துழாய் எனும் துளசிச்செடியின் கீழ் பூமா தேவியின் வடிவாக அவதரித்தாள்.

திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.

திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.

பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள்.

அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள்.

தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள்.

அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள்.

தானே அரங்கனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம் ஆடிப்பூரம். அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் .

Share this:

Write a Reply or Comment

nineteen − 9 =