June 10 2018 0Comment

மகிமை பொருந்திய கோமதி சக்கரம்!

மகிமை பொருந்திய கோமதி சக்கரம்!

நம் பாரத தேசத்தின் மேற்கு கோடியில் குஜராத் மாநிலத்தில் கடலோரமாக உள்ள திருத்தலம் துவாரகை. 

இங்கு பஞ்ச துவாரகை உள்ளது.

அதில் ஒன்று கோமதி துவாரகை ஒன்றும் உண்டு. 

இந்த துவாரகையில் தான் கோமதி ஆறு கடலோடு கலக்கிறாள். 

இதன் கரையில்தான் பகவான் கண்ணபிரான் விஷ்வகர்மா உதவியுடன் அரண்மனை அமைத்து ஆண்ட இடம் என கூறப்படுகிறது. 

இவ்விடத்தில் கண்ணபிரான் அருளோடு கோமதி சக்கரம் உருவானது என்று கூறப்படுகிறது. 

கோமதி சக்கரம்! கோமதி நதியில் கிடைக்கும் ஒரு கல் எனலாம்.

இந்த கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள் துவாரகா கல்,

விஷ்ணு சக்ர கல், பிரதீக் கல், நாராயணக் கல், திருவல சுழி கல் என வேறு பெயர்களும் உண்டு.

இந்த கோமதி சக்கர கல்லை வைத்து வணங்கினால் முக்தி தரும் ஷேத்திரங்கள் 7 ஆகும். 

அவை #அயோத்தியா, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சிபுரம், அவந்திகா எனும் உஜ்ஜயினி, துவாரகை ஆகிய ஏழு ஷேத்திரங்களை வணங்கிய பலன் உடன் கிட்டும். 

சொர்ணக்கல் சக்கரம் என்றும் கோமதி சக்கரத்தைக் கூறுவர். 

கோமதி ஆறு கங்கையில் உருவாகி பிரிந்து இறுதியாக கடலில் கலந்து முடியும் இடம் துவாரகையாகும்.

துவாரகையின் பரம பவித்ரமான கோமதி நதியில் அஷ்டலட்சுமியும் குடிகொண்டதால் தான் இந்நகரமே ஜொலித்தன என புராணம் கூறுகிறது.

அஷ்டலட்சுமிக்கு இணையாக பகவானால் உருவாக்கப்பட்ட மேலான செல்வமே கோமதி சக்கரம் என புகழப்படுகிறது. 

இந்த கோமதி சக்கரத்தின் சக்தியே இதற்கு சாட்சியாகும். 

கோமதி சக்கர கல்லை வைத்து பூஜிப்பவர்கள் மோட்சம் அடைகிறார்கள்.

சங்கோதரா, ஸ்ரீ தீர்த்தா என்ற பெயரும் துவாரகைக்கு உண்டு. 

இந்த கோமதி சக்கர கல் சொர்க்கம் + மோட்சம் இரண்டிற்கும் உதவுகிறது. விஷ்வ கர்மாவால் உருவாக்கப்பட்ட துவாரகையில் கிருஷ்ணன் மக்கள் சங்கடம் போக்கி கொள்ள கோமதி சுழியை பதித்து கொடுத்துள்ளார் என்ற ஐதீகமும் உண்டு.

மகிமைகள்!

கோமதி சக்கரம் ஸ்ரீவிநாயக பெருமானோடு  தொடர்புள்ளதாகும்.

சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு என்று கூறுவார்கள். 

எச்செயலை செய்ய துவங்கும் முன்னரும் பிள்ளையார் சுழி போட்டு செயல்களை செய்ய துவங்கினால் லாபகரமாக முடிவு இருக்கும் என்பர். 

பிள்ளையார் சுழிக்கு இன்னொரு பெயர்தான் கோமதி திருவல சுழியாகும். இதன் உட்பொருள் சுபம் லாபம் என்பதாகும். 

இந்த சுழியை ஒருவர் கண்டாலே அவர் மூலாதாரத்தை தொட்டதாகவும் முதற்கடவுளை வணங்கியதாகவும் அர்த்தமாகும். 

ஆதியில் எல்லா சுழிக்கும் முதல் சுழி கோமதி சுழியாகும். #பிள்ளையாரின் துதிகை சுழியை பார்த்தால் வெற்றியாகும். 

அதே போல் கோமதி சுழியை பார்த்தாலே வெற்றியாகும் என ரகு (சூரியவம்சம்) வம்சத்தினர் கையாண்டு வெற்றிபெற்று நிரூபித்துள்ளனர். சுதர்சன சக்கரத்திற்கு ஆதிசக்கரம் இந்த கோமதி சக்கரமாகும்.

கோமதி சக்கரத்தை வைத்து வழிபட்டாலே போதும். 

காசிக்கு செல்ல வேண்டிய கட்டாயமே இல்லை.  அக்கினியால் எல்லா பிரச்சனையும் தீர்க்க முடியாது. ஆனால் #கங்கையாலும் கங்கையில் படைக்கப்பட்ட பொருளாலும் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கலாம்.

 

அன்னை கங்கா மாத #கோமதி சுழி பூஜை செய்து நாடி வருவோர் துன்பத்தை போக்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம் உண்டு.

புண்ணியம் செய்யும் மனிதருக்கே கோமதி சக்கரம் கையில் கிடைக்கும் எனவும் ஐதீகம் உண்டு.

 

புண்ணியம் செய்தவருக்கு தன்னால் சேர வேண்டும் என்ற காரணத்தினாலேயே இதை பற்றிய விமர்சனம் வெளியில் பிரபலமில்லாமல் போனது . 

பரத்வாஜ் மகரிஷிகள் இதற்கு விமோசனம் தந்தார் எவ்வாறெனில் கங்கை தீர்த்தம் உடன் கொண்டு எவர் பூஜித்தாலும் அவர்களின் குடும்பத்திலுள்ள பாவ சாபங்களை கங்கை நீர் ஈர்த்துக்கொள்ளும் என வழி கூறினார். 

கங்கை தீர்த்தம் பாவங்களை ஈர்த்துக்கொள்ளும் கோமதி சக்கரம் செல்வ பெருக்கத்தை தொழில் பெருக்கத்தை உண்டாக்கும். நிம்மதியைக் கொடுக்கும்.

 

கோமதி சக்கரம் ஒரு உயிர்கல் வகையாகும். வளரக்கூடியதாகும். இதன் சுழியை சற்று நேரம் உற்று பார்த்து கொண்டிருந்தாலே சில மாறுதல் #மனத்திரையில் தெரிவதை உணர்வீர்கள்.

கோமதி சக்கரம் உள்ள இடத்தில் #சிவகோபம் #சக்தி கோபம் உண்டாவதில்லை. 

கோமதி சக்கரத்தில் மகாலட்சுமியின் சின்னம் (பிரதீக்) உள்ளதால் , இந்த கற்களை வைத்து பூஜிக்கிறவர்கள் மோட்சத்தை அடைகிறார்கள்.

 

அசுரகுலம், தேவகுலம் இரண்டிற்கும் பொதுவானவள் அன்னை #மகாலட்சுமி. அதைப்போல பொதுவானது கோமதி சக்கரம். எனவே இதை வைத்திருந்தாலே போதும். நற்பலன் விளையும் . 

படைக்கப்பட்ட உயிர்கள் அத்தனையும் சுழியுடனே படைக்கப்பட்டது.

காய்கறிகளை நறுக்கினாலும், மரங்களை அறுத்தாலும் கூட உள்ளே வல சுழி இருக்கும். 

உருண்டையான பூமியை இரண்டாக பங்கிட்டு அதன் மையத்தில் உயிர்களும் கீழே பாதாளமும் மேலே ஆகாயமும் உள்ளது. 

இதில் பாதாள சுழியும் ஆகாய சுழியும் உயிர்களின் சுழியும் ஒன்றாகவே இருக்கிறது. அதனால்தான் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்கிறது.  சம்மந்தமும் ஏற்ப்படுகிறது . 

உற்பத்தி ஆவதும் அழிவதும் மாறி மாறி நடக்க இந்த சம்மந்தமும் ஒரு காரணமாகும். இதில் சுதர்சன சக்கரம்போல் காக்கக்கூடிய சுழி கோமதி சக்கரமாகும். 

Share this:

Write a Reply or Comment

15 + sixteen =