கோதண்டபாணி ராமர் திருக்கோவில்:

கோதண்டபாணி ராமர் திருக்கோவில்:

அயோத்தியாபட்டினம் கோதண்டராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மையப் பகுதியில் அயோத்தியாப்பட்டிணம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.

 தல வரலாறு :

ராவணன் வரதம் முடிந்து ராமன், சீதை, லட்சுமணன், அனுமன், சுக்கிரீவர், விபீஷணர் மற்றும் படை வீரர்களுடன் அயோத்தி திரும்பிய பொது இங்கு தங்கி இரவு ஓய்வெடுத்தனர். 

அதற்குள் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டதை உணர்ந்து அயோத்தி செல்வதற்கான காலம் தாமதமானதல் இங்கேயே பட்டாபிஷேகம் நடைபெற்றது.

கோயில் அமைப்பு :

இக்கோயிலில் கோதண்டராமசுவாமி, சீதை சன்னதிகளும், விநாயகர், கருடாழ்வர், ஆஞ்சநேயர், ஆழ்வர்கள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. 

இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

பூசைகள் :

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

பங்குனி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

Share this:

Write a Reply or Comment

5 × 4 =