April 17 2018 0Comment

காசி விஸ்வநாதர் கோவில்

                                     
காசி விஸ்வநாதர் கோவில்:

காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் திருத்தலமாகும்.

இக்கோவில் உத்திரப்பிரதேசத்திலுள்ள வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது.

வாரணாசி என்று தற்போது அழைக்கப்பெற்றாலும் பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டதால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோவில் என அழைக்கப்படுகின்றது.

விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும்.

வரலாறு :

இந்தியாவின் முதன்மையான ஜோதிர்லிங்க தலம் இது. கி.பி 1034ம் ஆண்டு காசியில் முதல் விஸ்வநாதர் கோவில் கட்டப்பட்டது.

இக்கோவிலை பலமுறை முகலாய பேரரசர்களால் இடித்து தகர்க்கப்பட்டது. இதை இந்து மக்கள் திரும்ப கட்டி வந்தனர்.தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யாபாய் கட்டினார்.

1669-ல் அக்பரின் பேரன் அவுரங்கசீப் விஸ்வநாதர் கோவிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு கோவில் அருகில் ஒரு மசூதியையும் கட்டினார்.

சிருங்கர் மண்டப சுவரை ஆதாரமாகக் கொண்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம். இதிலிருந்து காசி கோவில் ஒரு புண்ணிய சத்திரம் மட்டுமல்ல ஒற்றுமையின் சின்னமாகும்.

கோவில் அமைப்பு :

இங்குள்ள விஸ்வநாதர் ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரம் உள்ளது.

கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது.

இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.

ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் பழமையான லிங்கம் வைக்கப்பட்டிருப்பதாய் ஐதீகம். இவ்வாலயத்தின் வழிபாடு சிறப்புமிக்கது.

இவ்வாலயத்தில் தனிச்சன்னிதியில் அகில உலகத்துக்கும் உணவளிக்கும் அன்னை ஸ்ரீ அன்னபூரணி எழுந்தருளியுள்ளாள்.

காசியின் புகழுக்கான காரணம் :

சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன். அவன் அசுவமேத யாகம் செய்தான். இதனால்

இந்திரன் தனது பதவி பறிபோய்விடும் எனப் பயந்து அசுவமேத யாகக் குதிரையைத் திருடி

இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாமுனியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து

விட்டான்.

குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் முனிவரைத் துன்புறுத்தினர். இதனால் கோபம்

கொண்ட முனிவர் ராஜகுமாரர்களையும் அவர்களுடன் வந்த அனைவரையும் தனது

கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார்.

தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர

மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான்.

ஆனால் முனிவரின் கோபப்பார்வையால் இறந்த இளவரசர்கள் யாரும் முகதி அடையவில்லை.

அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகான்கள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய

வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும்

கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே சாபவிமோட்சனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள்.

கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும்

முடியவில்லை ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள்

முக்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான்.

அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது

திருமுடியில் கங்கையை விழச்செய்து பின் பூமியில் நதியாக ஓடச் செய்தார்.

இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன

இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து

முன்னோர்களின் ஆன்மாக்களை முக்தியடையச் செய்து வருகின்றனர்.

 

Share this:

Write a Reply or Comment

nine + 2 =