February 10 2018 0Comment

அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோவில்

அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோவில்

⭐ முதல் சிப்பாய் கலகம், பொம்மி நாயக்கர் மற்றும் ஆர்க்காட்டு நவாப் உள்ளிட்ட மன்னர்கள் ஆட்சி செய்த நகரமான வேலூர் மாவட்டம் தற்போது கோவில் நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவில், பஞ்சாப்பில் சீக்கியர் பொற்கோவில் இருப்பது போல, இந்துகளுக்கு தமிழகத்தில் ஒரு பொற்கோவில் உள்ளது பெருமைக்குரியதாகும்.

⭐ இப்பொற்கோவில் வேலூர் அருகே மலைக்கோடி என்னுமிடத்தில் உள்ளது. இது நாராயணி பீடம் என்று அழைக்கப்படும் நாராயணி அம்மா அமைத்ததாகும். இது முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டு உள்ளது. இந்த கோவில் வேதத்தை வெளிபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

சுவாமி : லட்சுமி நாராயணி.

ஊர் : ஸ்ரீபுரம் – திருமலைக்கோடி.

மாவட்டம் : வேலூர் மாவட்டம்.

தல வரலாறு :

⭐ இந்தியாவில் தங்கத்தால் முழுவதும் ஆன இரண்டாவது கோவில் ஆகும். முதலாவது – அனைவருக்கும் தெரிந்த பஞ்சாப் பொற்கோவில். வேலூர் தங்கக்கோவில் சுமார் 5,000 சதுர அடிப்பரப்பளவும் தங்கத்தால் இழைக்கப்பட்டு தங்கக்கோவிலாக விளங்குகிறது. தங்க கோவிலில் உள்ள கடவுள் ‘நாராயணி அம்மன்”.

⭐ முதலில் இங்கு பழைய கோவில் இருந்தது. பின் பக்கத்தில் இந்த தங்க கோவில் கட்டப்பட்டுள்ளது. பொற்கோவிலின் எதிரே ரோட்டைக் கடந்து சென்றால், ஒரு குடிசைக்குள் சுயம்பு நாராயணியும், இதை ஒட்டிய கற்கோவிலில் மற்றொரு நாராயணியும் அருள்செய்கின்றனர். இந்தக் கோவிலை ‘நாராயணி பீடம்” என்கின்றனர். இந்த பீடத்தில், கோவிலின் நிறுவனரான ‘சக்தி அம்மா” இருக்கிறார். மக்கள் இவரிடம் ஆசிபெறச் செல்கின்றனர்.

தலச்சிறப்பு :

⭐ இங்கு ‘நாராயணி அம்மன்” சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் தென் இந்தியாவின் பொற்கோவில் (தங்கக்கோவில்) என அழைக்கப்படுவது சிறப்பு.

⭐ மண்டபத்துக்கு பின்னால் மனிதனுடைய 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் போவதை உணர்த்தக்கூடிய வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைந்துள்ளது.

⭐ ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் இந்த லட்சுமி நாராயணி கோவில் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில் வட்ட வடிவில் கோவில் உள்ளது. மேலே இருந்து, கோவிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்படி கோவிலை அமைத்துள்ளனர்.

⭐ இந்த அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன 10 அடுக்கு கொண்ட ஆயிரம் திரிகள் ஏற்றக்கூடிய விளக்கு உள்ளது.

⭐ கோவிலை சுற்றிலும் புல்வெளியும், அதன் நடுவே சுதையால் ஆன துர்க்கையும், லட்சுமியும், சரஸ்வதியும், மாரியம்மன் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்குள்ளே செயற்கையான மலைகளும், குளங்களும், நீர்வீழ்ச்சிகளும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

⭐ நவீன விளக்குகள், பழங்கால மாட கல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் இரவை பகல் போல மாற்றுகின்றன. கோவிலுக்குள்ளே ஏராளமான மரங்கள் பச்சைப்பசேல் என்று அருமையாக காட்சியளிக்கின்றன.

⭐ மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

Share this:

Write a Reply or Comment

eighteen − 10 =